நடுவரை ஆபாசமாகத் திட்டிய மும்பை பயிற்சியாளருக்கு 15% அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரைன் பொல்லார்ட் நான்காம் நடுவரை ஆபசமாகத் திட்டியதற்காக போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபாரதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு நடந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வெற்றி இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியில் 19ஆவது ஓவரில் கிரைன் பொல்லார்ட் நான்காவது நடுவரை நோக்கி ஆபாசமாகத் திட்டினார் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தக் காரணத்தினால் ஐபிஎல் விதிமுறைகள் 2.3ன் படி லெவல் 1 குற்றத்தினால 15 சதவீதம் அபராதமும் 1 தகுதியிழப்புப் புள்ளியும் வழங்கப்படுகிறது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
நடுவர் பங்கஜ் தர்மாணி விதித்த இந்த அபராதத்தை பொல்லார்ட் ஏற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக மும்பை அணிக்காக பொல்லார்ட் விளையாடும்போதும் பலமுறை அபராதம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




