சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்தார் ரவூப் ஹக்கீம்

சென்னை: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான Rauff Hakeem, தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (19) மாலை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான Adhav Arjuna அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. மேலும், இலங்கையிலுள்ள சிறுபான்மை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் Joseph Vijay அவர்களை சந்திக்கும் நோக்கில் தமிழ்நாட்டிற்கு வருகை தர திட்டமிட்டுள்ளமை குறித்தும் ரவூப் ஹக்கீம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் எடுத்துரைத்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான K. Nawas Kani, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், தென்காசி மாவட்டச் செயலாளர் சையது பட்டாணி, எம்.எஸ்.எப். மாநிலச் செயலாளர் ஷபீக் அஹமது மற்றும் மணிச்சுடர் நாளிதழின் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இலங்கை மற்றும் தமிழ்நாட்டுக்கிடையிலான உறவுகள், அரசியல் ஒத்துழைப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.




