மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் – வெளியான புதிய அறிவிப்பு

தெற்காசிய மகளிர் கால்பந்து போட்டி 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 8ஆவது தெற்காசிய மகளிர் கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி கோவாவில் மே மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 6ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று குலுக்கல் முறையில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதன்படி போட்டியில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நேபாளம், இலங்கை, பூடான் அணிகளும், ‘பி’ பிரிவில் 5 முறை சாம்பியனான இந்தியா, நடப்பு சம்பியன் பங்களாஷே், மாலத்தீவு அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
அரை இறுதிப்போட்டி ஜூன் 3ஆம் திகதியும், இறுதிப்போட்டி ஜூன் 6ஆம் திகதியும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




