EN
Local

ஹொரணை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரணை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வீதிக்கு பிரவேசிக்க முயன்றபோது டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், வேதற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

Back to top button