EN
Local

விஜய்க்கு நாமல் வாழ்த்து

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற தளபதி விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது X தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

“மகத்தான வெற்றியைப் பெற்ற சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்! உண்மையான பணி இப்போதுதான் தொடங்குகிறது. வரவிருக்கும் சவால்களை முறியடிக்கவும், மக்களுக்கு அர்த்தமுள்ள நன்மைகளை வழங்கவும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் பலமும் உறுதியும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

இரு நாடுகளின் மக்களையும் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில், இலங்கையுடன் வலுவான மற்றும் மிகவும் சாதகமான உறவை எதிர்பார்க்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்…” என்று நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button