EN
Local

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யர் நசீர் அவர்கள், நேற்று (30) அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் உதவிகளுக்காகப் பிரதமர் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.

பரஸ்பர கௌரவம், நட்பு மற்றும் பொதுவான அபிலாஷைகளின் அடிப்படையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமூகமான உறவுகள் குறித்து இரு தரப்பினரும் இதன்போது நினைவுகூர்ந்தனர்.

அத்துடன் கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதும், ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் இச்சந்திப்பின் அடிப்படை நோக்கமாக அமைந்தது.

Related Articles

Back to top button