EN
Local

யாழ்ப்பாணத்தில் சீமான் ஆதரவு பதாகைகள்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளமை தற்போது பேசுபொருளாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக முதன்மையான பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டதுடன், இன்று (21) திருநெல்வேலி சந்தி பகுதியில் மேலும் ஒரு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

வரும் Tamil Nadu Legislative Assembly election 2026 ஏப்ரல் 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் இந்த பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக அரசியல் மற்றும் தேர்தல் சூழல் குறித்து ஈழத் தமிழர்கள் நீண்டகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழர் உரிமைகள் மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் சீமானுக்கு வட இலங்கையில் குறிப்பிடத்தக்க ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக வைக்கப்படும் இந்த பதாகைகள் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button