EN
Local

கிண்ணியாவில் அமைக்கப்படும் திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றம் தொடர்பாக கள ஆய்வு

கௌரவ ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியாவில் அமைக்கப்பட்டு வரும் திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் முன்னேற்றத்தை பார்வையிடும் நோக்கில், மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மே 29 ஆம் திகதி கள விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் நேரடியாக பார்வையிடப்பட்டதுடன், திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான மீதமுள்ள பணிகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், பகல்நேரப் பராமரிப்பு நிலையத்தின் எஞ்சியுள்ள பணிகள் மற்றும் திறப்பு விழாவின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர், மாவட்ட பொறியியலாளர், சமூக சேவைகள் திணைக்கள இணைப்பாளர், கிண்ணியா பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச சபை தலைவர் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த திறன் அபிவிருத்தி பகல்நேரப் பராமரிப்பு நிலையம் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட பின்னர், கிண்ணியா மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு மற்றும் சமூக சேவை வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button