குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 46 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பில் சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிகபட்சமாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 164 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.




