EN
Sports

இலங்கை மகளிர் ஏ அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி நியூஸிலாந்து மகளிர் ஏ அணி வெற்றி

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான உத்தியோகப்பற்றற்ற மகளிர் T20 போட்டியில், இலங்கை மகளிர் ஏ அணியை 5 விக்கெட்களால் நியூஸிலாந்து மகளிர் ஏ அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் தொடரை ஏற்கனவே இழந்திருந்த நியூஸிலாந்து அணி, இறுதிப் போட்டியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

மிகக் குறைந்த ஓட்டங்கள் பெறப்பட்ட இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் ஏ அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 78 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அணித் தலைவி சத்யா சந்தீப்பனி அதிகபட்சமாக 16 ஓட்டங்களைப் பெற்றார். சஞ்சனா காவிந்தி மற்றும் சுமுது நிசன்சலா தலா 15 ஓட்டங்களையும், பியூமி வத்சலா 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூஸிலாந்து சார்பில் ஜெஸ் வொட்கின் அபாரமாக செயல்பட்டு 4 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். கேய்லி நைட் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் ஏ அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை எட்டியது.

ப்ரூ ஹாலிடே ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும், கேட் ஆண்டர்சன் 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் பிரமுதி மெத்சரா 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், சச்சினி நிசன்சலா 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: ஜெஸ் வொட்கின்

Related Articles

Back to top button