EN
Local

மத்திய மாகாண ரணவிரு நினைவு தின நிகழ்வு கண்டியில் நடைபெற்றது

கண்டி, மைலப்பிட்டியில் அமைந்துள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் மத்திய மாகாண ரணவிரு நினைவு தின நிகழ்வுகள் (மரணித்த யுத்த வீரர்கள் நினைவு தினம்) மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபேகோன் தலைமையில் நடைபெற்றது.

17வது தேசிய ரணவிரு நினைவு தினத்துக்கு இணையாக இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் தாய்நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற யுத்த வீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

இதன்போது மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் உயிர்நீத்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.

மத்திய மாகாண சபை, மாகாண ஆளுநர் அலுவலகம், ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் பிரதேச அரச நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு சர்வ மத ஆசீர்வாதங்களுடன் நடைபெற்றது.

Related Articles

Back to top button