குஜராத்தை வீழ்த்திய பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ்!

குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நேற்று பெங்களூருவில் இடம்பெற்ற ஐபில் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் அபாரமாக துடுப்பெடுத்தாடி சதம் விளாசினார்.
பின்னர், 206 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி விராட் கோலியின் 81 ஓட்டங்கள் மற்றும் படிக்கல்லின் 55 ஓட்டங்களின் உதவியுடன் 18.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. போட்டியின் ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வானார்.
இந்த வெற்றியின் ஊடாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




