நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை மே மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (23) கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அதற்கமைய, குறித்த வழக்கு விசாரணைகளை மே மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.
இலங்கையில் றக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக எனக் கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்று அதனைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் சட்டமா அதிபரினால் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




