Local
ரஷ்யா பயணிக்கவுள்ள அமைச்சர் விஜித!

இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிக்குத் தீர்வுகாணும் நோக்கில், அரசாங்கம் ரஷ்யாவுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்த ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு முக்கிய கட்டமாக, எரிபொருள் மற்றும் நிலக்கரி கொள்வனவுக்கான ஒப்பந்தங்கள் குறித்துத் தீர்மானிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் மே மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
நாட்டில் நிலவும் எரிசக்தி தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்காக ரஷ்யாவுடன் நீண்டகால ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள அரசாங்கம் எடுத்து வரும் தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையவுள்ளது.




