Local
உரிமையாளரின் பெயரை உள்ளடக்கி வாகன இலக்கத் தகடுகள்

புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு குறித்த திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
அத்துடன், வாகன உரிமையாளரின் பெயரைக் குறிப்பிட்டு இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளும் புதிய முறையையும் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
குறிப்பாக கணினி கட்டமைப்பு இற்றைப்படுத்தப்பட்டவுடன், இத்தகைய விசேட செயற்திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.




