EN
Local

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் சேவையாற்றும் சுபம் நிறுவனத்தின் “சிவகங்கை” பயணிகள் கப்பல், 2026 ஜூன் 3 ஆம் திகதி முதல் மீண்டும் தனது சேவையைத் தொடங்கும் என நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம். ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக சில வாரங்களுக்கு முன்பு கப்பலில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

வாரத்தில் ஆறு நாட்கள் சேவை

கப்பல் சேவை வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களிலும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணச்சீட்டு முன்பதிவு

பயணிகள் பின்வரும் வழிகளில் முன்பதிவு செய்யலாம்:

இந்த சேவையின் மீளாரம்பம் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான மக்கள் தொடர்பு, சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button