EN
Local

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இவர்களில் 33 பேர் இன்று விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, குறிப்பிட்ட சில கைதிகளுக்கு இந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெசாக் பண்டிகையின் மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை முன்னிட்டு இந்த விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் தகுதி பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்பட்டு, சமூகத்தில் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

Related Articles

Back to top button