EN
Local

வாகன இறக்குமதி சுங்க வரியின் மீது மேலதிக வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50 வீத மேலதிக வரியை (Surcharge) விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாத காலப்பகுதிக்கு இந்த 50 வீத மேலதிக வரி வசூலிக்கப்படவுள்ளது.

இருப்பினும், மே 15 அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் (Letter of Credit) திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த புதிய 50 வீத மேலதிக வரி பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 50 வீத மேலதிக வரியைக் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு நிதி அமைச்சு இதற்கு முன்னர் தீர்மானித்திருந்த போதிலும், அதனை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button