Local
சிறுமி துஷ்பிரயோக வழக்குக்கு நீதி கோரி நாடளாவிய தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன

அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவுக்கு எதிராகச் சிறுமி ஒருவரின் துஷ்பிரயோக வழக்கில் நீதி கோரி, மேலும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் மே 27, 28 மற்றும் 29 ஆகிய தினங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் போராட்டங்களுக்கு சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (29) மன்னார், பண்டாரவளை, பொலன்னறுவை, கேகாலை, நீர்கொழும்பு, சிலாபம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா, திருகோணமலை மற்றும் கொழும்பு கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




