EN
Sports

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த கிங் கோலி

ஐபிஎல் 2026 ரி20 கிரிக்கெட் தொடர் விராட் கோலி ஆதிக்கம் நிறைந்ததாக இருக்கிறது. இந்தியாவில் 8,000 அல்லது அதற்கும் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார். ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டயில் விராட் கோலி இந்த சாதனையை படைத்தார்.

முன்னதாக 231 இன்னிங்ஸில் 7,998 ஓட்டங்களை குவித்திருந்த விராட் கோலி நேற்றைய போட்டியில் 13 பந்துகளில் 28 ஓட்டங்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அவர் 8,000 ஓட்டங்களை கடந்து அசத்தினார். தற்போது 232 இன்னிங்ஸ் முடிவில் விராட் கோலி 8,016 ஓட்டங்களுடன் ஐபிஎல். தொடர்களில் இந்தியாவில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா 237 இன்னிங்ஸில் 6,274 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஷிகர் தவான் 187 இன்னிங்ஸில் 5,819 ஓட்டங்களுடன் மூன்றாவது இடத்திலும், டேவிட் வோர்னர் 164 இன்னிங்ஸில் 5,689 ஓட்டங்களுடன் நான்காவது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 181 இன்னிங்ஸில் 4,958 ஓட்டங்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

விராட் கோலி சாதனையை தவிர்த்து நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி அணி 155 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 15.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Articles

Back to top button