பிரதமர் – யுனிசெப் பிரதிநிதிகள் சந்திப்பு

UNICEF பிரதிநிதிகள் குழுவினர், ஹரிணி அமரசூரியவை ஜூன் 12 அன்று அலரி மாளிகையில் சந்தித்து, ‘திட்வா’ சூறாவளியால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பில் “திட்வா சூறாவளி கல்வி அவசர பதில் திட்டத்தின் முதலாம் கட்ட முன்னேற்ற அறிக்கை (ஜனவரி–ஏப்ரல் 2026)” அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவிகளை வழங்குவது, கல்வி தொடர்ச்சியை உறுதி செய்வது மற்றும் எதிர்கால தலையீடுகளை மேம்படுத்துவது போன்ற விடயங்கள் முக்கியமாக பேசப்பட்டன.
மேலும், குழந்தைகளின் நலன்களை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை அரசாங்கத்துக்கும் யுனிசெப்பிற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் குறித்தும் கருத்தாடல்கள் நடைபெற்றன.
இந்தச் சந்திப்பில் UNICEF இலங்கைக் பிரதிநிதி Emma Brigham மற்றும் Begona Arellano உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




