யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிரான பண மோசடி வழக்கை தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என தெரிவித்து யோஷித்த ராஜபக்ஷ தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆரம்பகட்ட ஆட்சேபனை மனுவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க நிராகரித்தார்.
பிரதிவாதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்வித சட்டத் தடையும் இல்லை என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, யோஷித்த ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.
இதன்போது பதிலளித்த யோஷித்த ராஜபக்ஷ, தாம் குற்றமற்றவர் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கின் மேலதிக விசாரணைகளை தொடர நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.




