EN
Local

புத்தாண்டில் மாக்கும்புர பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

புத்தாண்டு காலப்பகுதியில் கொட்டாவ, மாக்கும்புர பன்முக போக்குவரத்து நிலையத்தின் ஊடாக சுமார் ஒரு இலட்சத்து 55,000 பயணிகள் தமது போக்குவரத்துச் சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி முதல் நேற்று (19) வரை இந்த எண்ணிக்கையிலான பயணிகள் இப்போக்குவரத்து நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளதாக மாக்கும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்தின் நிர்வாக உதவியாளர் நிமல் வெத்தசிங்க தெரிவித்தார்.

பயணிகளின் வசதிக்காக மாகும்புர பயணிகள் முனையத்திலிருந்து 2,600க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களாக சாதாரண கால அட்டவணையில் மாற்றங்களைச் செய்து பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், நாளை (21) முதல் மீண்டும் சாதாரண கால அட்டவணையின் படி பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button