EN
International

உலகளாவிய ரீதியில் முடங்கிய பேஸ்புக் – பயனர்கள் அவதி

ஜூன் 12

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான Meta Platforms நிறுவனத்திற்குச் சொந்தமான Facebook சேவையில் உலகளாவிய ரீதியில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக பல நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான பயனர்கள் தங்களது கணக்குகளை அணுகுவதிலும், பதிவுகளைப் பார்வையிடுவதிலும் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இணையத்தளங்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் IsDown தளத்தின் தகவலின்படி, 5,700-க்கும் மேற்பட்ட பயனர்கள் Facebook சேவை செயலிழந்துள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்பு

இந்த தொழில்நுட்ப கோளாறு இலங்கை உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள பயனர்களை பாதித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளிலிருந்தே அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

பயனர்கள் Facebook-இல் உள்நுழைவதில், செய்திகளைப் பார்வையிடுவதில், பதிவுகளைப் பகிர்வதில் மற்றும் பிற அம்சங்களைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை

இதுவரை Facebook நிறுவனத்தினால் அல்லது அதன் தாய் நிறுவனமான Meta நிறுவனத்தினால் கோளாறுக்கான காரணம் தொடர்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.

சேவையை மீளமைக்கும் பணிகளில் தொழில்நுட்பக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுவதுடன், நிலைமை தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button