EN
International

தென்கிழக்கு ஆசிய சைபா் மோசடி நிலையங்கள் மீது நடவடிக்கை தொடக்கம்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் செயல்படும் சட்டவிரோத சைபா் மோசடி நிலையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

சீனாவின் எல்லைத் தாண்டிய குற்றக் கும்பல்களால் இயக்கப்படும் இந்த மோசடி மையங்கள், வேலை தருவதாகக் கூறி வெளிநாட்டினரை வரவழைத்து, அவா்களை அடைத்து வைத்து, சைபா் குற்றங்களைச் செய்ய வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தியா்கள் பலரும் இந்த மோசடி மையங்களில் சிக்கி, மீட்கப்பட்டு வருகின்றனா். இந்தக் குற்றக் கும்பல்கள் அமெரிக்கா்களைக் குறிவைத்து கோடிக்கணக்கான டாலா்களைச் சூறையாடி வருவதைத் தடுக்க, ஜனாதிபதி ரம்ப் நிா்வாகம் விசேட நடவடிக்கையை அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கம்போடியாவைச் சோ்ந்த பிரபல தொழிலதிபரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கோக் ஆன் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் கைவிடப்பட்ட ஒரு மோசடி மையத்திலிருந்து கைப்பற்றப்பட்ட 8,000 தொலைப்பேசிகள், 1,500 கணினிகளில் இருந்த தரவுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button