சஞ்சு சாம்சனின் சாதனை சதத்துடன் மும்பையை வீழ்த்திய சென்னை!

ஐ.பி.எல். 2026 தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த மும்பை அணிக்கு, சென்னை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சவாலாக அமைந்தனர்.
குறிப்பாக, ஆரம்பம் முதலே நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் விளையாடிய சஞ்சு சாம்சன், 54 பந்துகளில் 101 ஓட்டங்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த சதத்தின் மூலம் சஞ்சு சாம்சன் இரண்டு முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளார்
ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசிய முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதேவேளை 2026 ஐ.பி.எல். தொடரில் சஞ்சு சாம்சன் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும்.
இதற்கு முன் ஏப்ரல் 11 அன்று டெல்லி கெபிட்டல்ஸ் அணிக்கு எதிராக அவர் சதமடித்திருந்தார்.
சஞ்சு சாம்சனின் சதத்தின் உதவியுடன் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இமாலய இலக்கை எட்டியது.
208 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
முடிவில் மும்பை அணி 104 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.




