EN
Local

சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வகட்சி மாநாட்டை கூட்டுமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையில் வெள்ளிக்கிழமை (22) தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

அந்தக் கலந்துரையாடலின் போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அவசரமாக சர்வகட்சி மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என்றும், அதற்கான யோசனையை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, தாம் தற்போது மட்டக்களப்பில் தங்கியிருப்பதாகவும், கொழும்பு திரும்பிய பின்னர் இது தொடர்பான இறுதி பதிலை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button