EN
Local

கபில விவகாரத்தில் பொலிஸார் வெளியிட்ட விடயம்

மறைந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு போலிப் பிணையாளர்கள், பல சந்தர்ப்பங்களில் கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை, ஒரு சந்தேக நபர் 10 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களையும், மற்றுமொரு சந்தேக நபர் 07 கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வாழைத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் தமது வசிப்பிடத்தை உறுதிப்படுத்தி, அந்த கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Back to top button