திருகோணமலையில் எண்ணெய் தாங்கி திருத்தப் பணிகள் முன்னேற்றம்

Ceylon Petroleum Corporation இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் Trincomalee திருகோணமலையில் உள்ள 4 எண்ணெய் தாங்கிகளின் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 2 எண்ணெய் தாங்கிகளின் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்துவதற்கு அவசியமான குழாய் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை விரைவாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, Sapugaskanda Oil Refinery சப்புக்கஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்தி, அதன் அன்றாட சுத்திகரிப்பு கொள்ளளவை 50,000 இலிருந்து 100,000 ஆக உயர்த்தும் பாரிய திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகளவிலான எரிபொருள் சுத்திகரிப்பை மேற்கொள்வதன் மூலம் வெளிநாட்டு அந்நியச் செலாவணியை அதிகரிக்கவும், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இது முக்கியமானதாகும் என வலுசக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.




