International
Flower Moon என பெயரிடப்பட்ட மே மாதத்தின் முதல் முழு நிலவு

மே மாதத்தின் இந்த முதலாவது முழு நிலவைFlower Moon என பெயரிட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (01) தென்பட்ட நிலவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாசா இதனை குறிப்பிட்டுள்ளது.
வசந்த காலத்தில் பூக்கள் அதிகமாகப் பூப்பதைக் குறிக்கும் அடையாளமாகவே இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி தென்படவுள்ள முழு நிலவு MicroMoon என பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த சந்தர்ப்பத்தில் நிலவு பூமிக்கு அதிக தூரத்தில் தனது சுற்றுப்பாதையில் அமைந்திருப்பதன் காரணமாகவே அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




