தமிழகம், கேரளா, மேற்கு வங்க முதலமைச்சர்கள் பின்னடைவு

தமிழகம், கேரளம், மேற்க வங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
அஸாம் மற்றும் புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அஸாம் முதலமைச்சரும் பாஜக தலைவருமான ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வசிக்கும் நிலையில் புதுமை முதலமைச்சர் என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி வெற்றி பெற்றதாக அறிவிக்க்ப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலை காணப்படுகிறது.
அதன்படி, தமிழகத்தில் தவெகவும் கேரளாவில் காங்கிரஸும் மேற்கு வங்கத்தில் பாஜகவும் ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் அவரவர் தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்த நிலையில் 4ஆவதும் சுற்று முடிவில் முன்னிலையில் உள்ளார்.




