Local
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (29) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 314.99 ரூபாயிலிருந்து 315.54 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை விலை 322.75 ரூபாயிலிருந்து 323.26 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாயின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.





