EN
Local

840,411 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 840,411 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் முதல் 22 நாட்களில் மாத்திரம் 99,777 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏப்ரல் 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதோடு, அன்றைய தினம் மாத்திரம் 6,624 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியப் பிரஜைகளே அதிகளவானோர் ஆவர். அவர்களின் எண்ணிக்கை 29,192 எனப் பதிவாகியுள்ளது.

இதற்கு மேலதிகமாக பிரித்தானிய பிரஜைகள் 8,439 பேரும், அவுஸ்திரேலிய பிரஜைகள் 8,186 பேரும், சீன பிரஜைகள் 7,161 பேரும், ரஷ்ய பிரஜைகள் 5,1342 பேரும், பிரான்ஸ் நாட்டவர்கள் 4,659 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்தும் கணிசமான அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Related Articles

Back to top button