EN
Local

நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் குழு கைது

விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்து நிதி மோசடிகளில் ஈடுபட்ட வெளிநாட்டு சந்தேக நபர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 41 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும் 33 பெண் சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (06) மாலை கொள்ளுப்பிட்டி, உத்தரானந்த மாவத்தை பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதி ஒன்றில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 39 வயதுக்குட்பட்ட வியட்நாம் நாட்டவர்கள் எனவும், இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேலும் 05 வெளிநாட்டு ஆண் சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் மாத்தறை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button