EN
Sports

கோலி அதிரடி சதம்: பெங்களூரு மீண்டும் முதலிடம்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 57 ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.

குறித்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 192 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 193 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் விராட் கோலி அபாரமாக துடுப்பெடுத்தாடி 105 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த வெற்றியின் ஊடாக பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button