இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியா விஜயம்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளை நேரில் பார்வையிடுவதற்காக அவர் இந்த விஜயத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். அத்தோடு, மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டமும் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





