EN
Local

புத்த த்ரிமங்கள நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் பூரணை பொயா தினம் இன்று (30)

புத்த த்ரிமங்கள நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் பூரணை பொயா தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது.

புத்த பெருமானின் பிறப்பு, புத்தத்வம் அடைதல் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவை இன்றுபோன்ற ஒரு வெசாக் பொயா தினத்திலேயே நடைபெற்றதாக நம்பப்படுகிறது. வெசாக் பூரணை தினம் இலங்கை மக்களுக்கு மத, கலாசார மற்றும் சமூக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்.

புத்த பெருமானின் மூன்றாவது இலங்கை வருகையும் இன்றுபோன்ற ஒரு நாளிலேயே இடம்பெற்றதாக கருதப்படுகிறது. அந்த வருகையின் போது சமனல கந்த சிகரத்திற்கு வந்த புத்த பெருமான் அங்கு திருப்பாத சின்னத்தை பதித்ததாகவும், அதனை நினைவுகூரும் வகையில் நடைபெறும் ஸ்ரீபாத யாத்திரை பருவம் வெசாக் பூரணை பொயா தினத்தில் நிறைவடைவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மத ரீதியான பல்வேறு முக்கியத்துவங்களைக் கொண்ட இந்த வெசாக் பூரணை பொயா தினத்தை இலங்கையரும் உலகெங்கும் வாழும் பௌத்த மக்களும் பக்தியுடன் மற்றும் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர்.

Related Articles

Back to top button