Local
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ‘கொத்தடிமைகளாக’ பயன்படுத்தப்படுவதாகக் கூறும் அறிக்கை குறித்து அமைச்சுகள் ஆலோசனை ; விரைவில் பதில் அளிக்கப்படும் – சமந்த வித்யாரத்ன

தோட்டத் தொழிலாளர்கள் ஒருசில தோட்டக்கம்பனிகளால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான எம்.எஸ் இன்டர்நெஷனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விரைவில் பதில் ஒன்றை வழங்க இருக்கிறோம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் நிசாம் காரியப்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.




