EN
Local

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிய மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று (28) முற்பகல் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார்.

உமா ஓயா திட்டத்திற்கு வழங்கப்பட்ட பணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அதன்படி, குறித்த வாக்குமூலத்தை வழங்கியதன் பின்னர் அவர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Back to top button