EN
Local

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வெள்ளிக்கிழமை (05) வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.

கறுப்பு உடை அணிந்து, முகங்களை மூடியபடி வாள்களுடன் வந்த குழுவினர், வீட்டு கதவை பலவந்தமாகத் திறந்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

Back to top button