EN
Local

அமெரிக்க பசுபிக் இராணுவ துணைத் தளபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் உத்தி மற்றும் திட்டங்களுக்கான துணைத் தளபதி மேஜர் ஜெனரல் Giles Cornelia, 2026 மே 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான தரைப்படை பேச்சுவார்த்தைகள் மற்றும் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கை இராணுவத் தளபதி Lasantha Rodrigo மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுடன் சந்திப்புகள் இடம்பெற்றன.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றதுடன், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், இராணுவ பொறியியல் ஒத்துழைப்பு, இராணுவ மருத்துவப் பயிற்சிகள் போன்ற முக்கிய துறைகளில் கூட்டுறவை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேரிடர் கால ஆயத்தநிலை, சவால்களை எதிர்கொள்ளும் திறன் மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இலங்கையுடன் இணைந்து செயல்படுவதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது எனவும் இந்த விஜயத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button