சீனாவில் ஷி ஜின்பிங்குடன் ட்ரம்ப் சந்திப்பு

சீனாவுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பெய்ஜிங்கில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்தார்.
ரஷ்யா உள்ளிட்ட நட்பு நாடுகளின் தலைவர்கள் கடந்த காலங்களில் சீனாவுக்கு வருகை தந்தபோது அந்நாட்டின் அமைச்சர்களே நேரில் வரவேற்றனர். ஆனால், நேற்று பெய்ஜிங் வந்திறங்கிய ட்ரம்ப்பை விமான நிலையத்துக்குச் சென்று சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங்கே வரவேற்றார்.
இந்த நிலையில், பெய்ஜிங்கில் உள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மாளிகைக்கு இன்று காலை வருகை தந்த ட்ரம்ப்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ட்ரம்ப் மற்றும் ஷி ஜின்பிங் தலைமையில் இருநாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தக ஒப்பந்தம், ஈரான் போா் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த பயணத்தில் ட்ரம்ப்புடன் அவரின் மகன் எரிக், மருமகள் லாரா, டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.




