EN
Local

‘தித்வா’ அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 69 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைக்க நஷ்டஈடு வழங்கப்பட்டது

தெல்தோட்டை பிரதேசத்தில் ஏற்பட்ட ‘தித்வா’ அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த 69 குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு அண்மையில் பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதற்கட்ட உதவியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.

புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான இந்த நிதியுதவி, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு முக்கிய ஆதரவாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கண்டி மாவட்ட மேலதிக செயலாளர் நிலூகா புலத்கே, தெல்தோட்டை பிரதேச செயலாளர் துஷாரி கெதரக்கும்புர, பாத்தஹேவாஹெட்ட பிரதேச செயலாளர் சாகரிகா தில்ஹானி உள்ளிட்ட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நஷ்டஈட்டு திட்டம், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பான வீடுகளை அமைத்துக் கொள்வதற்கும் உதவும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Related Articles

Back to top button