EN
Local

பொது அவசரகால நிலை மேலும் நீட்டிப்பு – விசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தற்போது இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் என். எஸ். குமாரசிங்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2490/06 ஆம் இலக்க வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த நீட்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், நாட்டின் வழமையான செயல்பாடுகளைப் பேணுவதற்கும், பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விநியோகங்கள் தடையின்றி தொடர்வதை உறுதிப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button