Local
ரயில் மற்றும் பேருந்து சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை

நாடு முழுவதும் இன்று (16) முதல் 50 முதல் 60 சதவீதமான தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளைய தினத்திற்குள் (17) தனியார் பேருந்து சேவைகளை முழுமையாக வழமைக்குக் கொண்டுவர முடியும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் வேலைநாளாக இருந்தபோதிலும், மக்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதால், அதிகளவான பேருந்துகள் பயணிகள் இன்றி இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று முதல் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று சுமார் 120 ரயில் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து கண்காணிப்பாளர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.




