Local
நியூசிலாந்து எதிர்க்கட்சியின் வெளிவிவகார பேச்சாளர் வானுஷி வோல்டர்ஸ் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் சந்திப்பு

நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான எதிர்க்கட்சிப் பேச்சாளர் வானுஷி வோல்டர்ஸ், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், இருதரப்பு விவகாரங்கள் பலவற்றை குறித்து பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் உள்ளிட்ட இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து அவரிடம் விளக்கமளித்ததாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வானுஷி வோல்டர்ஸ் தனது இலங்கை வேர்கள் குறித்து நினைவுகூர்ந்ததுடன், நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை புலம்பெயர்ந்தோர் வழங்கும் முக்கிய பங்களிப்பை நெகிழ்ச்சியுடன் பாராட்டியதாகவும் அமைச்சர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.




