Local
சிவாஜிலிங்கம் இல்லத்தில் அமைச்சர் சந்திரசேகர் குழு நலம் விசாரிப்பு

உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை நகர சபை விசேட உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அதன்படி, இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையில் உள்ள சிவாஜிலிங்கம் அவர்களின் இல்லத்திற்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் க. இங்குமரன் மற்றும் வ. ரஜீவன் ஆகியோர் சென்று நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.
சிகிச்சைக்காக சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவாகும் என சிதாஜிலிங்கம் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பொதுமக்கள் தமக்கு நிதியுதவி வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.




