முள்ளிவாய்க்கால் நினைவுகளை வைத்து முன்னைய அரசுகள் அரசியல் செய்தன – பஸ்மின் ஷெரிப்

முள்ளிவாய்க்கால் நினைவுகளை வைத்து முன்னைய அரசுகள் அரசியல் செய்தன – பஸ்மின் ஷெரிப்
முன்னாள் அரசாங்கங்களின் தலைவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுகளை வைத்து அரசியல் செய்ததோடு, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சுதந்திரத்தையும் வழங்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் உட்பட யாராக இருந்தாலும் தமிழ் மக்களின் உணர்வுகளை அரசியல் நோக்கத்திற்காகவே பயன்படுத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதி யுத்த காலத்தில் உயிரிழந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் நமது உறவுகளே என்றும், தேசிய மக்கள் சக்தி அரசு தமிழ் மக்களின் வேதனைகளை வைத்து ஒருபோதும் அரசியல் செய்யவில்லை; இனிமேலும் செய்யாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், ஆரம்ப கால அரசியல் தலைமைகளின் தவறான முடிவுகளே நாட்டில் நீண்டகால யுத்த சூழ்நிலை உருவாகக் காரணமாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இக்கருத்துக்கள் ஒரு ஊடக நிகழ்ச்சியில் கலந்துரையாடும்போது அவர் தெரிவித்ததாக குறிப்பிடப்படுகிறது.




