EN
Local

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பௌத்தாலோக வெசாக் குழுவினருக்கு இடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தாலோக வெசாக் குழுவின் பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல் திங்கட்கிழமை (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்முறை 25ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்படும் பௌத்தாலோக வெசாக் வலயம், பௌத்தாலோக மாவத்தையை மையமாகக் கொண்டு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில், ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனுடன் தொடர்புடைய ஆரம்ப கட்ட ஏற்பாடுகள், மக்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசார், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, அகில இலங்கை பௌத்த மகா சபையின் தலைவர் சந்திரா நிமல் வாகிஷ்ட, உப தலைவர் ரொஷான் மத்துமகே, பொருளாளர் வசந்த டி சில்வா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் அரச நிறுவனங்களின் அதிகாரிகள், பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரிகள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

Related Articles

Back to top button