EN
Local

வழமைக்கு திரும்பிய புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள்

தில்லையடி பகுதியில் நிலவிய வெள்ள நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்போது முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, புத்தளம் – தில்லையடி இடையிலான ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின.

இதன் காரணமாக, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு புத்தளம் வரையான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, சேவைகள் சிலாபம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button